Current Affairs – 11 January 2019
தமிழகம்
1.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு) இடம்பிடித்துள்ளது.
2.சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் உள்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளையிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3.தமிழக காவல்துறை இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
4.இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியா
1.சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி வியாழக்கிழமை பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3.முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
4.நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையின் ஆக்கப்பூர்வ செயல்பாடு 47 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 27 சதவீதமாகவும் இருந்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
5.இந்திய அரசின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் தாமரையும் பிரதமர் மோடியின் முகம் இருக்கும் திட்டத்துக்கு வரி செலுத்துபவர்களின் பணத்தை செலவிடமாட்டேன் என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து விலகுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வர்த்தகம்
1.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., விலக்கு பெறுவதற்கான, ஆண்டு விற்றுமுதல் வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2.நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.8,105 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம்
1.வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ வியாழக்கிழமை இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விளையாட்டு
1.சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.
2.ஆசிய கால்பந்து போட்டி 2019-இன் ஒரு பகுதியாக அபுதாபியில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடம் 2-0 என தோல்வியடைந்தது இந்தியா.
இன்றைய தினம்
- அல்பேனியா குடியரசு தினம்(1946)
- இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)
- இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)
- இந்திய தொழிலதிபர் பிர்லா இறந்த தினம்(1983)
- நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)
– தென்னகம்.காம் செய்தி குழு