Current Affairs – 11 January 2018
தமிழகம்
1.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறும் 41-வது சென்னை புத்தகக் காட்சி, பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.இந்த புத்தகக் காட்சி 22-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தியா
1.பொது இடங்களில் புகைப்பிடித்த 3,000 பேரிடம் டெல்லி போலீசார் அபராதம் வசூலித்தனர்.
2.மத்திய விண்வெளித்துறை செயலாளர் மற்றும் விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம்
1.1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
–தென்னகம்.காம் செய்தி குழு