தமிழகம்

1.திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.


இந்தியா

1.விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

2.கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.சிறுதொழில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கென தமிழில் பிரத்யேகமாக தனி வலைதளம் உருவாக்கப்பட்டு, சிறு தொழில்முனைவோர் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது.


உலகம்

1.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அரபு மொழி, ஆங்கிலம் ஆகியவை அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழிகளாக இருந்தன.

2.தங்கள் நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தென் கொரியா அதிகரித்துள்ளது.


விளையாட்டு

1.தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரயில்வே பட்டம் வென்றது.


ன்றைய தினம்

  • ஜப்பான் நிறுவப்பட்ட தினம்(கிமு 660)
  • கமரூன் இளைஞர் தினம்
  • பொஸ்னியா விடுதலை தினம்
  • நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது(1814)
  • மகாத்மா காந்தி, ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்(1933)

– தென்னகம்.காம் செய்தி குழு