இந்தியா

1.பெங்களூரு – புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.பாலஸ்தீனத்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.ஐ.நா. சார்பில் சூடான் நாட்டுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படை குழுவின் தலைவராக முதல்முறையாக பிரட்டனை சேர்ந்த பெண் லெப்டினன்ட் கர்னலான கேட்டி ஹிஸ்லோப் பொறுப்பேற்றுள்ளார்.


விளையாட்டு

1.23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு விளையாட்டில் முதல் தங்கப்பதக்கத்தை சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா தட்டிச்சென்றார்.


இன்றைய தினம்

1.இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (Thomas Alva Edison Birth Anniversary Day).
தாமஸ் ஆல்வா எடிசன், 1847ஆம் ஆண்டில், பிப்ரவரி 11 அன்று அமெரிக்காவில் பிறந்தார். படிக்காதமேதை, பட்டம் பெறாதவர். ஆனால் கண்டுபிடிப்புகளின் சக்கரவர்த்தியாக விளங்கினார். மிக அதிகப்படியான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். இவரின் கண்டுபிடிப்புகளுக்காக 1093 பதிவுரிமைகளைப் பெற்றார். மாணவர்களால் கொண்டாடப்படும் முக்கிய தினமாகும்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு