Current Affairs – 11 December 2018
தமிழகம்
1.பெண்களுக்கு வீடுகளிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதுகுறித்து கட்டணமில்லாத 181 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 181எண் சேவையை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
2.தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை மற்றும் வார்டு எல்லை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிக்கை வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா
1. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் சமதா (ஆர்எல்எஸ்பி) கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
வர்த்தகம்
1.இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் உர்ஜித் படேல் பதவி விலகியிருக்கிறார்.
2.இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார் விற்பனை, முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.43 சதவீதம் குறைந்துள்ளது.
3.அடுத்த இருபது ஆண்டுகளில், மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடையும் சர்வதேச நகரங்கள் குறித்த ஆய்வை “ஆக்ஸ்ஃபோர்டு எக்கனாமிக்ஸ்’ அமைப்பு அண்மையில் மேற்கொண்டது. அதில் உலக அளவில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் முதல் 10 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தது என்பதை அந்தப் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.திருப்பூர் நகரம் இப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.திருச்சி நகரம் இப்பட்டியலில் 8.29 சதவீத வளர்ச்சியுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. சென்னை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
உலகம்
1.சக உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் (பிரெக்ஸிட்) முடிவை பிரிட்டன் திரும்பப் பெறலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
2.ஆர்மீனிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் இடைக்காலப் பிரதமர் நிக்கோல் பாஷின்யான் வெற்றி பெற்றுள்ளார்.
விளையாட்டு
1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு டி பிரிவில் இருந்து ஜெர்மனி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
இன்றைய தினம்
- இந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)
- இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)
- இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்(1969)
- யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)
- கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)
- தென்னகம்.காம் செய்தி குழு