தமிழகம்

1.ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

2.வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு “ஏரறிஞர்” விருதினை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வழங்கினார்.


இந்தியா

1.காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக, ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.


உலகம்

1.சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்கள் திரையிடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2.சிரியாவில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளின் ஒரு பகுதியை திரும்பப் பெறுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்


வர்த்தகம்

1.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு வங்கியான ‘நோமுரா’ கணித்துள்ளது.

2.பாரத ஸ்டேட் வங்கி தனது 1,300 வங்கிக் கிளைகளின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை மாற்றியுள்ளது.

3.நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 14.29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.


விளையாட்டு

1.ஜப்பானில் நடைபெற்றுவரும் 10-ஆவது ஆசிய துப்பாகிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் மற்றும் குழு பிரிவில் இந்திய வீரர் சௌரவ் சௌதரி தங்கம் வென்றார். மகளிர் தனிநபர் பிரிவில் மானு பாகெர் வெள்ளி வென்றார்.

 


இன்றைய தினம்

1. 1962 – கென்யா – விடுதலை நாள்

2. 1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

–தென்னகம்.காம் செய்தி குழு