தமிழகம்

1.அரசுத் துறைகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், மாநில தன்னாட்சி பெற்ற அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மென்பொருள்கள், வன்பொருள்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து அளிக்கும் விருப்ப நிறுவனமாக தமிழ்நாடு மின்னணு கழகத்தை (எல்காட்) தமிழக அரசு அங்கீகரித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை நிறுவனத்தையும் விருப்ப நிறுவனமாக அங்கீகரிக்க வேண்டுமென அந்த நிறுவனம் அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கோரிக்கையை  பரிசீலித்த தமிழக அரசு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனைகளை அரசுத் துறைகள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள், அரசு தன்னாட்சி பெற்ற அமைப்புகள் போன்றவற்றுக்கு மின்ஆளுமை முகமை வழங்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது.


இந்தியா

1.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

2.பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசலை கொள்முதல் செய்யும் திட்டத்தை  முதன்முதலாக பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை தொடங்கி வைத்தன. முதல்கட்டமாக இத்திட்டம் நாடு தழுவிய அளவில் 100 நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.செயில் எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 81 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69 கோடி டாலர் (ரூ.4,830 கோடி) குறைந்துள்ளது.

3.பொதுத் துறையைச் சேர்ந்த மின் தயாரிப்பு நிறுவனமான என்டிபிசி முதல் காலாண்டில் ரூ.2,840.28 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் இரு ஏவுகணைகளை வட கொரியா சோதித்தது.

2.சம்ஜௌதா விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தில்லி – லாகூர் பேருந்து சேவையும் வரும் திங்கட்கிழமை முதல் ரத்துசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


விளையாட்டு

1. ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் செளரவ் வர்மா, இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி இணை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

2.ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.


ன்றைய தினம்

  • பிரேசில் மாணவர் தினம்
  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)
  • மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)

– தென்னகம்.காம் செய்தி குழு