தமிழகம்

1.மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவின்போது பயன்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை (ஆக. 13) முதல் நடைமுறைக்கு வருகிறது.


இந்தியா

1.வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு (டிஜிட்டல்) முறையிலும் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

3.ஆந்திரத்தில் செய்யப்படும் இனிப்புகளில் முக்கியமாக உள்ள பூத்தரேக்குலு என்ற இனிப்பு, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இண்டியா – புக் ஆஃப் ரிகார்ட்ஸ்) இடம்பெற்றுள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், மின் துறையின் நிலக்கரி இறக்­கு­மதி, 14 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

2.கடந்த ஜூன் மாதம், நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, மே மாதம், 3.2 சத­வீ­தம்; மறு­ம­திப்­பீட்­டில், 3.9 சத­வீ­த­மாக இருந்­தது.

3.ஜிஎஸ்டி வரி சட்டத்தை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், முதல் 11 மாதங்களில் ரூ.52,077 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் விண்கலத்தை சனிக்கிழமை செலுத்த இருக்கிறது.

2.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான மூன்றாவது சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.


விளையாட்டு

1.கனடாவில் நடைபெறும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சிமோனா ஹேலப் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

2.இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்கிறார்.
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா மற்றும் பாலெம்பாங் நகரங்களில் வரும் 18 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 45 நாடுகள் பங்கேற்கின்றன.


ன்றைய தினம்

  • பிரேசில் மாணவர் தினம்
  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)
  • மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)
  • தென்னகம்.காம் செய்தி குழு