தமிழகம்

1.மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தேர்தல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஆர்.பழனிசாமி புதன்கிழமை பொறுப்பேற்றார். அவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்தார்.


இந்தியா

1.ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2.ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு (நீதிபதிகள் தேர்வு குழு) பரிந்துரை செய்துள்ளது.

3.மக்களவை 5ஆம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.


வர்த்தகம்

1.கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து, திருத்தப்பட்ட வட்டி விகிதம் அடங்கிய பட்டியலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டது.


உலகம்

1.அண்ட வெளியின் அதிசயமாகக் கருதப்படும் கருந்துளையை (BLACK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.மேசியர்-87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள எம்87 என்றழைக்கப்படும் கருந்துளையை முதல்முறையாக படம் பிடித்துள்ளனர்.
அண்டவெளியில், மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதிகளை 18-ஆம் நூற்றாண்டே கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை கருப்பு நட்சத்திரம் என்று அழைத்து வந்தனர்.
அந்த கோளவடிமான ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் விண்துகள்கள், ஒளி போன்ற மின்காந்த கதிர்வீச்சுகள் கூட, ஊடுருவி வெளியேற முடியாத அளவுக்கு அவற்றின் ஈர்ப்பு சக்தி மிக வீரியமாக இருந்ததால், அவற்றின் உருவம் எத்தகைய தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியாது; எல்லைக்குள் என்ன நடக்கிறது என்பதை எந்த வித கருவியைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது.
எனினும், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக எல்லைக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

2.இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி நாடுகளாக அங்கீகரித்துக் கொள்ளும் இரு தேச தீர்வுக்கு ஆதரவளிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ மறுப்பு தெரிவித்தார்.


விளையாட்டு

1.விஸ்டன் புத்தகத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான, உலகின் முதன்மை கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், முதன்மை கிரிக்கெட் வீராங்கனை விருதை இந்திய மகளிரணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர்.

2.மகளிர் ஹாக்கி போட்டியில் மலேசியாவுக்கு எதிரான 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

3.சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • சர்வதேச தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)
  • ஆப்பிள் 1 உருவாக்கப்பட்டது(1976)
  • விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)
  • ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)

– தென்னகம்.காம் செய்தி குழு