Current Affairs – 11 April 2018
உலகம்
1.அமெரிக்க அதிபரின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
2.உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை கின்னஸ் நிறுவனம் நேற்று அங்கீகரீத்துள்ளது.
3.உலகில் முதன்முறையாக வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம்
1.1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
2.1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
3.1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
4.இன்று உலக நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் தினம்.
–தென்னகம்.காம் செய்தி குழு