தமிழகம்

1.தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ரூ.3,750 கோடிக்கு ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் செய்யப்பட்டன.

2.தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்துக்காக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

3.இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கி கணக்குகளை அதிக அளவில் தொடங்கி, தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக அஞ்சல் வட்டத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கினார்.


இந்தியா

1.ராஜஸ்தான் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா (78), பதவியேற்றார்.

2.ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் மகசேசே விருதை இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார்  பெற்றுக் கொண்டார்.

3.உலக அளவில் மலேரியா பாதிப்பில் இந்தியா 4-ஆவது இடத்தில் இருப்பதாக, தி லேன்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடியாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.கடைகள், தொழில் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் பெற இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.

2.வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை எஸ்ஐஏஎம் சேகரித்த 1997-98-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கார்கள், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 18,21,490 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டு விற்பனையான 23,82,436 வாகனங்களோடு ஒப்பிடுகையில் 23.55 சதவீதம் குறைவாகும்.
முந்தைய ஜூலை மாதத்தில் அனைத்து ரக வாகனங்களின் விற்பனை, 18,25,148-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த விற்பனை 18.71 சதவீதம் குறைவாக இருந்தது.


உலகம்

1.பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஜான் பெர்கோவ், அக்டோபர் மாத இறுதியில் பதவி விலகப் போவதாக  அறிவித்தார்.


விளையாட்டு

1.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 19வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

2.இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி தொடரையும் 2-1 என கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது.


ன்றைய தினம்

  • உலக தற்கொலை தடுப்பு தினம்
  • சீனா ஆசிரியர் தினம்
  • சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)

– தென்னகம்.காம் செய்தி குழு