Current Affairs – 10 September 2018
தமிழகம்
1.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா
1.பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
2.மறைந்த மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக கட்டப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
வர்த்தகம்
1.இணைய வழி வர்த்தகம் (இ-காமர்ஸ்) தொடர்பான மத்திய அரசின் வரைவு கொள்கைகள் குறித்து பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து இதுதொடர்பாக பல்வேறு துறைச் செயலர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
உலகம்
1.பாகிஸ்தானின் 13-ஆவது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி பதவியேற்றுக் கொண்டார்.
விளையாட்டு
1.ஐஏஏஎஃப் தடகள கான்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார் மும்முறை தாண்டுதல் வீரர் அர்பிந்தர் சிங்.
செக் குடியரசு, ஆஸ்டரவா நகரில் கான்டினென்டல் கோப்பை தடகளப் போட்டிகள் நடக்கின்றன.
இன்றைய தினம்
- உலக தற்கொலை தடுப்பு தினம்
- சீனா ஆசிரியர் தினம்
- சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
- 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)
- தென்னகம்.காம் செய்தி குழு