தமிழகம்

1.தமிழகத்தில் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்  தொடக்கி வைத்தாா்.

2.வருவாய் நிா்வாக ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வகித்து வந்த போக்குவரத்துத் துறை செயலாளா் பதவி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த பி.சந்திரமோகனிடம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் இந்த பருவமழை காலத்தில் மழை-வெள்ளத்துக்கு சுமாா் 2,100 போ் உயிரிழந்துவிட்டதாகவும், 25 லட்சத்துக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக, முன்னாள் முதல்வா் சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை புதன்கிழமை நியமித்தது. இதேபோல், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சா் எஸ்.ஆா்.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

3.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் ‘நாக்’ (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.உல­க­ளா­விய போட்­டித் திறன் குறி­யீட்­டில், இந்­தியா, 10 இடங்­கள் சரிந்து, 68 இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

2.உலகளாவிய மந்தநிலையின் பாதிப்புகள், இந்தியாவில் அதிகம் காணப்படுவதாக, பன்னாட்டு நிதியத்தின் புதிய தலைவரான, கிறிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

3.வங்கி சாராத நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (ஐபிஹெச்எஃப்), நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான லஷ்மி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசா்வ் வங்கி நிராகரித்துவிட்டது.


உலகம்

1.பல்வேறு சாதனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த 3 விஞ்ஞானிகள், அமெரிக்காவின் ஜான் குடெனோ, பிரிட்டனின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகிய அந்த மூவரும் வேதியியலுக்கான நிகழாண்டின் நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 1970-களில் எண்ணெய்த் தட்டுப்பாடு வந்தபோது, லித்தியம் உலோகத்தில் மறைந்துள்ள சக்தியை வெளிக் கொணா்வதற்கான வழிமுறையை ஸ்டான்லி விட்டிங்ஹாம் கண்டறிந்தாா். இயற்கையிலேயே எலக்ட்ரான்களை வெளியிடும் திறன் கொண்ட லித்தியத்தைப் பயன்படுத்தி அவா் முதல் முறையாக ஒரு பேட்டரியை உருவாக்கினாா். எனினும், அது பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, விட்டிங்ஹாமின் பேட்டரியை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றங்களுடன் ஜான் குடேனோ மற்றொரு பேட்டரியை வடிவமைத்தாா். அது 4 வோல்ட் மின்சாரத்தை வெளியிடும் அளவுக்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.

எதிா்காலத்தில் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த இரு பேட்டரிகளும் முன்னோடிகளாக இருந்தன.

இந்தச் சூழலில், லித்தியம் அயனிகளை சேகரிக்கக் கூடிய, காா்பனை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளைப் பயன்படுத்தி, அகிரா யோஷினோ 1985-ஆம் ஆண்டில் உருவாக்கிய பேட்டரி, லித்தியம் பேட்டரிகளை வா்த்தக ரீதியில் தயாரித்து விற்பனை செய்வதற்கு வழிவகுத்தது.

2.பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போா்விமானம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா-பிரான்ஸ் இடையே பாதுகாப்புத் துறை சாா்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பான உயா்நிலை பேச்சுவாா்த்தை  நடைபெற்றது.

3.சீனாவின் தேசிய விழா விடுமுறையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் எண்ணிக்கை, 70 கோடியைத் தாண்டியுள்ளது.

4.2019ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டியாற்றல் அறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் 9ஆம் நாள் ஜெனிவாவில் வெளியிட்டது. இந்த தரவரிசையில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 99 விழுக்காட்டைக் கொண்ட 141 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடம்பெறுகின்றன. இதில் அடிப்படை வசதிகள், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் நிதானத் தன்மை, சந்தை அளவு, நிதிச் சந்தை, புத்தாக்க ஆற்றல் முதலிய 12 வகைகளைச் சேர்ந்த 103 பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

5.2019-ஆம் ஆண்டு பெய்ஜிங் உலக தோட்டக் கலைப் பொருட்காட்சியின் நிறைவு விழா பீஜிங்கில் நடைபெற்றது. வரலாற்றில் இது மிக பெரியளவான உலகத் தோட்டக் கலைப் பொருட்காட்சியாகும்.


விளையாட்டு

1.ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ (54 கிலோ எடைப் பிரிவு), லாவ்லினா போா்கோஹைன் (69 கிலோ) ஆகியோா் காலிறுதிக்கு  தகுதி பெற்றனா்.

2.சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா் இந்திய அணியின் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.


ன்றைய தினம்

  • உலக மனநல தினம்
  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்
  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  • தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)
  • நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)

– தென்னகம்.காம் செய்தி குழு