தமிழகம்

1.உலக வீடற்ற மக்கள் தினத்தையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 12 இடங்களில் வீடற்ற மக்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், மீட்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

2.தமிழக ஆளுநர் குறித்து கட்டுரை வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை சென்னை போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர். ஆனால், அந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட 124 சட்டப்பிரிவு பொருந்தாது என எழும்பூர் நீதிமன்றம், நக்கீரன் கோபாலை மாலையில் விடுவித்தது.

3.கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.

4.தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்கப்பட உள்ளது என மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார்.


இந்தியா

1.மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு வரம்புக்குள்வராது.

2.நாடு முழுவதும் 53 நகரங்களில் பிரத்யேகமாக ஆதார் சேவை மையங்களை அமைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) முடிவு செய்துள்ளது. சுமார் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரையிலான மதிப்பீட்டில் அவை அமைய உள்ளன.


வர்த்தகம்

1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2019-ஆம் ஆண்டில் 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.

2.எலக்ட்ரானிக் பொருள்களை வடிவமைத்து மற்றும் உற்பத்தி செய்யும் துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, ‘மேக் இன் இந்தியா’ தெரிவித்துள்ளது.

3.கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியா, 1.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக, மத்திய ஜவுளி துறை அமைச்சர்,ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.


உலகம்

1.ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

2.ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) பாதுகாப்பு அவையில், தாமதங்கள் ஏதுமின்றி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இல்லையேல், தன்னுடைய முக்கியத்துவத்தை பாதுகாப்பு அவை இழந்துவிடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் 15 வயது வீரரான லால்ரின்னுங்கா ஜெரேமி.
கடந்த 6-ஆம் தேதி 3-ஆவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இந்தியா சார்பில் 48 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. ஏற்கெனவே துப்பாக்கி சுடுதலில் துஷார் மானே, மெஹுலி கோஷ், ஜூடோவில் தபாபி தேவி, ஆகியோர் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

கிளப் த்ரோவில் ஏக்தா பேயனும், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் மணிஷ் நர்வாலும் தங்கம் வென்றனர். எஃப் 32 பிரிவில் நான்காவது முறையில் 16.02 மீ தூரம் எறிந்து ஏக்தா பேயன் தங்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • உலக மனநல தினம்
  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்
  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  • தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)
  • நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)
  • தென்னகம்.காம் செய்தி குழு