தமிழகம்

1.தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது.

2.தமிழகத்தில் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைப் பெற பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பா.பிரகாஷ் கூறினார்.


இந்தியா

1.இந்திய ராணுவத்தில் கே-9 வஜ்ரா, எம்777 உள்ளிட்ட மூன்று வகை பீரங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

2.மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 17-ஆம் தேதி பங்கேற்க இருக்கிறார்.

3.மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு (சிபிடிடி) புதிதாக வருவாய் துறை அதிகாரிகளான பி.கே.தாஸ், அகிலேஷ் ரஞ்சன் மற்றும் நீனா குமார் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.சிங்கப்பூரில், ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு மாநாடு, 12ம் தேதி துவங்குகிறது.

2.தொடர்ந்து 3 மாத சரிவுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 1.55 சதவீதம் அதிகரித்து 2,84,224-ஐத் தொட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் இதன் விற்பனை 2,79,877-ஆக காணப்பட்டது.


உலகம்

1.முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து உத்தரவிட்டார்.

2.சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

3.எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆசிய ஏர்கன் போட்டி ஜூனியர் கலப்பு அணி பிரிவில் புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை தங்கம் வென்றது.

2.பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் கடந்து சாதனை படைத்தார்.


ன்றைய தினம்

  • ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)
  • நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)
  • சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது(1970)
  • தென்னகம்.காம் செய்தி குழு