Current Affairs – 10 May 2019
தமிழகம்
1.பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
கன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.
சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
2.தமிழகத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இந்தியா
1.உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் அமைப்பு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.
இத்துடன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
2.மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் (2019-20) செயல்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.கடந்த 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரக வாகனங்களில் விற்பனையும் சரிவைச் சந்தித்துள்ளது.
2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2,47,278 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 2,42,457 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது, 2 சதவீதம் குறைவாகும். கடந்த மார்ச் மாத கார் விற்பனையான 2,46,615-உடன் ஒப்பிட்டாலும், கடந்த ஏப்ரல் மாத கார்களின் விற்பனை 2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரலில் அது 9 சதவீதம் சரிவைச் சந்தித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 14,09,662 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12,85,470 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த மார்ச் மாத விற்பனையான 13,43,610-உடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.
உலகம்
1.தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை முதல்முறையாக பயிற்சியில் ஈடுபட்டது.
2.இந்தியாவில் இருந்து அண்டை நாடான சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.
விளையாட்டு
1.டோக்கியா 2020 ஓலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது.
இன்றைய தினம்
- சிப்பாய் கழகம் துவங்கியது(1857)
- நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
- அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
- ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)
– தென்னகம்.காம் செய்தி குழு