தமிழகம்

1.தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலாத் தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

2.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 78.60 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்தியா

1.நாடாளுமன்ற மக்களவை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன.


வர்த்தகம்

1.எல்ஐசியின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 28.38 லட்சம் பேருக்கு ரூ. 13,649 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2.இந்தியாவைச் சேர்ந்த பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை ரூ.1,07,650 கோடிக்கு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.


உலகம்

1.காற்று மாசுபாட்டை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அளிக்கும் கோபஃன்-5  செயற்கைக்கோளை சீனா புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

 


விளையாட்டு

1.சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


ன்றைய தினம்

  • சிப்பாய் கழகம் துவங்கியது(1857)
  • நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
  • அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
  • ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)

–தென்னகம்.காம் செய்தி குழு