தமிழகம்

1.மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பு வளையத்தில் கடல் வளம் பாதிக்கப்படுவதால் தீவுகளை பாதுகாப்பது குறித்து சிறப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஆய்வு செய்யவுள்ளது.

2.தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 1,156 அரிய நூல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் படித்து பயன்பெறுவதற்காக இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

3.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) , 509 அமர்வுகளில் 68 ஆயிரத்து 347 வழக்குகளில் ரூ.274 கோடியே 12 லட்சத்துக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.


இந்தியா

1.அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2.மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஒபிசி) மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அந்த மாநில காங்கிரஸ் அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.


வர்த்தகம்

1.அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் (ரூ.7 லட்சம் கோடி) அளவிலான முதலீட்டை கவர்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சனிக்கிழமை தெரிவித்தார்.


உலகம்

1.உலகிலேயே மிக வயதான பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கனே டனகா(116), கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஜப்பானில் கடந்த 1903-ஆம் ஆண்டு பிறந்த கனே டனகா, ஃபுகுவோகா பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார்.


விளையாட்டு

1.பெர்லினில் நடைபெற்று வரும் ஜெர்மன் ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மெய்ரபா லுவாங், வைஷ்ணவி, காயத்ரி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
  • பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
  • யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)

– தென்னகம்.காம் செய்தி குழு