தமிழகம்

1.தேசிய நெல் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை( ஜூன் 10) 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் வழங்கப்பட்டன.


இந்தியா

1.உச்சநீதிமன்றத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் 8 தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்க இருக்கின்றனர்.

2.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளை பெறுவதற்காக வேளாண் துறையினரை வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) சந்திக்கிறார்.


வர்த்தகம்

1.ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளதால் பிண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

2.சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


உலகம்

1.பயங்கரவாதம் என்பது இந்தியா, இலங்கைக்கு பொதுவான அச்சுறுத்தலாக உள்ளது; எனவே அதனை ஒழிக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் கூட்டாக உறுதி பூண்டுள்ளனர்.

2.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசவிருப்பதை சீனா உறுதி செய்துள்ளது.


விளையாட்டு

1.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2.பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 12-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரபேல் நடால்.


ன்றைய தினம்

  • ஜோர்டான் ராணுவ தினம்
  • போர்ச்சுக்கல் தேசிய தினம்
  • நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
  • முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)

– தென்னகம்.காம் செய்தி குழு