Current Affairs – 10 June 2018
தமிழகம்
1.மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய காவல் ஆணையர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.மனோகரன்-ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு, திருப்பூர் காவல் ஆணையராக நியமனம்ஜெ.பாஸ்கரன்-தமிழக காவல்துறை செயலாக்கப்பிரிவு ஐ.ஜி.
இந்தியா
1.தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டமான “ஆயுஷ்மான் பாரத்’-ஐ செயல்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன், 8 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
வர்த்தகம்
1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 1-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59.37 கோடி டாலர் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உலகம்
1.டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்று வரும் உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது.
விளையாட்டு
1.பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இன்றைய தினம்
- ஜோர்டான் ராணுவ தினம்
- போர்ச்சுக்கல் தேசிய தினம்
- நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
- முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)
–தென்னகம்.காம் செய்தி குழு