தமிழகம்

1.சரக்கு, சேவை வரிவிதிப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வணிகர்களின் எண்ணிக்கை 10.30 லட்சமாக அதிகரித்துள்ளதாக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

2.கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உள்பட தமிழகம் முழுவதும் 14 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

3.காஞ்சிபுரம் மாவட்டம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ரூ.235 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.


இந்தியா

1.கடந்த 2016-18ஆம் ஆண்டுகளில் ரூ.900 கோடிக்கும் அதிகமாக பாஜக நன்கொடை பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

2.கடந்த 2008-09ஆம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 11 ஆண்டுகளில் வங்கிகளிலும், குறிப்பிடத்தக்க நிதி நிறுவனங்களிலும் ரூ.1,85,624 கோடிக்கு நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக 44,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.


வர்த்தகம்

1.இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2.தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் அதன் முழு மின்சார கோனா (K0na) காரை  அறிமுகப்படுத்தியது.


உலகம்

1.ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை, சட்டப்பேரவையில் நிறைவேற்றும் திட்டமில்லை என்று ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம்  தெரிவித்தார்.

2.ஷார்ஜாவில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் லாலோ சாமுவேலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் முதன்முதலாக நிரந்த குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் காலிறுதிச் சுற்றுக்கு  பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.காமன்வெல்த் சீனியர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • பஹாமாஸ் விடுதலை தினம்(1973)
  • டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)
  • வேலூர் சிப்பாய் கலகம் ஏற்பட்டது(1806)
  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)
  • இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)

– தென்னகம்.காம் செய்தி குழு