தமிழகம்

1.தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது.

2.குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின்கீழ் ரூ.58,356 கோடியில் 9 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று துணை முதல்வர் அறிவித்தார்.

3.தனியாரிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய முறைக்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

4.அழகு நிலையங்கள் தொடங்க காவல் அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையின் தடையின்மைச் சான்று கட்டாயம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


இந்தியா

1.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவியேற்றார்.


வர்த்தகம்

1.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரியை பதவி நீக்கம் செய்தது செல்லும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

2.இந்த நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்­யப்­படும் மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு, 33 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் வந்­துள்­ளன. இது, கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 15 சத­வீ­தம் அதி­கம்.


உலகம்

1.இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லியில்  சந்தித்தார்.

2.பாகிஸ்தானுக்காக இரு செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் காலிறுதிக்கு இந்திய வீரர் டி விஜ் சரண்-ஏ.சிதக் இணை முன்னேறியுள்ளது. டி விஜ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • பஹாமாஸ் விடுதலை தினம்(1973)
  • டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)
  • வேலூர் சிப்பாய் கழகம் ஏற்பட்டது(1806)
  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)
  • இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)

–தென்னகம்.காம் செய்தி குழு