Current Affairs – 10 January 2019
தமிழகம்
1.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.நிகழாண்டின் சிறந்த மனிதருக்கான விருது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது. கேரள பிரவாசி பாரதிய திவஸ் அமைப்பு, இவ்விருதுக்கு அவரைத் தேர்வு செய்துள்ளது.
3.தமிழக காவல்துறை இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா
1.தலைநகர் தில்லியில் கடந்த 2017-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளும், குற்றங்களும் அதிகரித்திருப்பது, காவல்துறையின் புள்ளி விவரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
2.சிபிஐ இயக்குநராக புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மா, இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்தார். இதையடுத்து, 13 சிபிஐ அதிகாரிகள் தங்களது முந்தைய பொறுப்பை வகிக்கவுள்ளனர்.
3.குஜராத் போலி என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பான விசாரணையைக் கண்காணித்து வந்த முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையிலான சிறப்பு கண்காணிப்புக் குழுவின் இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகம்
1.இரும்புத் தாது உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத் துறையைச் சேர்ந்த என்எம்டிசி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
2.பயணிகள் வாகனங்கள் விற்பனை நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான கால அளவில் 2 சதவீதம் குறைந்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
உலகம்
1.வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு புதன்கிழமையும் நடைபெற்றது.
2.இலங்கை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தமிழரான சுரேன் ராகவனை அதிபர் மைத்ரிபாலா நியமித்ததற்கு, அந்த மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
3.வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நான்கு நாள்களாக நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது.
விளையாட்டு
1.சிட்னி இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹேலப் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
2.இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஹரேந்திர சிங் புதன்கிழமை நீக்கப்பட்டார். அத்துடன், ஜூனியர் ஆடவர் அணிக்கான பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் பிரஜனேஷ் குணேஸ்வரன் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
இன்றைய தினம்
- உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
- விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
- முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)
– தென்னகம்.காம் செய்தி குழு