இந்தியா

1.மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
2.திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று தனது முந்தைய உத்தரவை திருத்தி தற்போது, கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.இந்தியாவின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் பிராட்யூஷை புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.இது உலகின் 4 வது மிக வேகமான கம்ப்யூட்டராகும்.


உலகம்

1.ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.இதில் சிறந்த திரைப்படமாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ (Three Billboards Outside Ebbing, Missouri) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படத்துக்கான பிரிவில் ‘லேடி பேர்ட்’ (Lady Bird) தேர்வானது.சிறந்த நடிகராக ‘டார்க்கஸ்ட் ஹவ்ர்’ (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்மேன் மற்றும் சிறந்த நடிகையாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ படத்தில் நடித்த பிரான்செஸ் மெக்டோர்மன்ட், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படப்பிரிவில் சிறந்த நடிகராக ஜேம்ஸ் பிராங்கோ, சிறந்த நடிகையாக சாவோய்ர்ஸே ரோனன், சிறந்த இயக்குநராக குயிலெர்மோடெல் டோரோ ஆகியோர் தேர்வாகினர்.இவ்விழாவில், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘தி மாஸ்டர் ஆப் நன்’ (The Master Of None) தொடரில் நடித்த அஸிஸ் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.இந்திய வம்சாவளியை சேர்ந்த அஸிஸ் அன்சாரி ஆசியாவில் இருந்து முதல்முறையாக கோல்டன் குளோப் விருதை பெற்ற நடிகர் என்ற சாதனையை பெற்றுள்ளார் .
2.அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ஜோனாதன் பேஸ் என்பவர் 2,32,49,425 இலக்க மிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு