தமிழகம்

1.வாகன விபத்துகளில் சிக்கும் வாகனங்களை எளிதில் கண்டறிய முதற்கட்டமாக செங்கல்பட்டு – திருச்சி வரை ரூ. 25 கோடியில் சென்சார் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

2.ஆசிரியா்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.திருக்குறளின் புகழை உலகமெல்லாம் பரப்பி வரும் பாஜக மாநிலங்களவை முன்னாள் எம்பியும், திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய்க்கு “திருக்குறளின் போர்வாள்’ விருது வழங்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.ஒரு நிறுவனம் குறித்து எதுவுமே தெரியாமல், அதன் நிதி நிலை அறிக்கையை தணிக்கை செய்ததாக சான்றளித்த, ‘ஆடிட்டர்’ முகேஷ் சோக்சி என்பவருக்கு, தொழில் புரிய, ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக அந்த நாட்டு இளவரசி உபோல்ரத்தனாவை நிறுத்தும் திட்டத்தை தாய் ரக்சா சார்ட் கட்சி கைவிட்டது.

2.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுடனான தனது இரண்டாவது சந்திப்பு, வியத்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.வரும் 12-ஆம் தேதி கவுஹாட்டியில் தொடங்கவுள்ள 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


ன்றைய தினம்

  • புதுடில்லி, இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது(1931)
  • கிறிஸ்தவ பெண்கள் இளையோர் அமைப்பு(ஒய்.டபிள்யூ.சி.ஏ.,) அமைக்கப்பட்டது(1870)
  • மடகஸ்கரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது(1897)
  • பிரான்ஸ், க்யூபெக் மாநிலத்தை யூ.கே.,விற்கு அளித்தது(1763)
  • அலெக்சன் கிரேன், தீயணைப்பு கருவியின் காப்புரிமம் பெற்றார்(1863)

– தென்னகம்.காம் செய்தி குழு