இந்தியா

1.பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சந்திரசேகர் ராத், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
2.நிதி ஆயோக் வெளியிட்ட நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
3.நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 4ஜி செல்போன் சேவை நேற்று முதல் பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி பெண் இயக்குனராக பெப்சிகோ நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு