தமிழகம்

1.பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித “கப்’களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2.பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 422 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தியா

1. இந்தியா, ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு நாட்டு விமானப் படையினர் பங்கேற்கும் 12 நாள் கூட்டுப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இன்று தொடங்கவுள்ளது.

2. கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. கேரளத்தின் 4-ஆவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.


வர்த்தகம்

1.சர்­வ­தேச ஆலோ­சனை நிறு­வ­ன­மான மில்­மேன், இந்­திய ஆயுள்மற்­றும் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை எனும் பெய­ரில் வெளி­யிட்டு உள்ள அறிக்­கை­யில் இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ
காப்­பீடு பெற்­றி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரம் மிக்க செயலர் பதவியிலிருந்து விலகவிருப்பதாக ஜான் கெல்லி அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு டி பிரிவில் இருந்து ஜெர்மனி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.


ன்றைய தினம்

  • சர்வதேச மனித உரிமைகள் தினம்
  • தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
  • நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
  • ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)
  • தென்னகம்.காம் செய்தி குழு