தமிழகம்

1.தமிழகம் முழுவதும் மகா லோக்-அதாலத்தில் 531 அமர்வுகள் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மாலை வரை 1.14 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.


இந்தியா

1.குஜராத் சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2.இந்த மூன்றரை ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.3,755 கோடி செலவிட்டுள்ளதாக தகவலுரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.


உலகம்

1.ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது.

2.இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.


வர்த்தகம்

1.நேரடி வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயானது, ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் ரூ.4.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

2.மத்திய அரசின் தங்கப் பத்திரம் நாளை வெளியீடு: ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,890

3.இந்தியாவின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 2016-17இல் ரூ.6.31 லட்சம் கோடியை எட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.உலக ஹாக்கி லீக் போட்டியின் 2-ஆவது அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

 


இன்றைய தினம்

1. சர்வதேச மனித உரிமைகள் தினம்

–தென்னகம்.காம் செய்தி குழு