தமிழகம்

1.வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2.பள்ளிக் கல்வித் துறையில் 5 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
மேலும், 3 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழிப் படம் “ஹெல்லாரோ’, மாநில மொழிகளில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக “பாரம்’ ஆகியவை தேர்வாகியுள்ளன.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் மற்றும் விக்கி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது.

2.பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் (பிஎம்-கிசான்) இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

3.பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  தெரிவித்தது.


வர்த்தகம்

1.தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூன் மாதத்தில் 2 சதவீதமாக சரிந்துள்ளது.

2.முக்கிய ஏற்றுமதி நாடுகளின் சந்தைகளில் தேவை குறைந்ததையடுத்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத கால அளவில் 8.48 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

3.உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளன.


உலகம்

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவுடனான கலாசார தொடர்புகள் அனைத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.


விளையாட்டு

1. தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது.

2.மாண்ட்ரியலில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்று முன்னணி நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)
  • முகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)
  • மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)
  • மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)

– தென்னகம்.காம் செய்தி குழு