Current Affairs – 10 August 2018
தமிழகம்
1.சென்னையில் தாய்லாந்து வீக் 2018′ வர்த்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
2.தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியா
1.தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவர் ராம் சேவாக் சர்மாவின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2.மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
3.வரலாற்றுச் சிறப்பு மிக்க தில்லி சட்டப்பேரவையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்து வைக்கிறார்.
4.பொதுமக்களின் மரபணு விவரங்களை அரசு சார்பில் சேகரித்து வைக்கவும், அதே சமயம், அத்தகவல்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யும் மரபணு தகவல் வங்கி மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
5.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வர்த்தகம்
1.ஐ.எஸ்.ஓ 9001, 14001 தரச்சான்றிதழ் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு,
சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் முழுவதையும், தமிழக அரசு திரும்ப வழங்குகிறது என, தொழில் மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2.இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
3.அடுத்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
உலகம்
1.பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவு அதிகாரி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய வரைவு சட்ட திட்டம் தொடர்பான நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2.டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
3.வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், ரிதுபர்ணா, மிதுன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)
- முகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)
- மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)
- மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)
- தென்னகம்.காம் செய்தி குழு