தமிழகம்

1.தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

2.சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இந்தியா

1.மக்களவைக்கு முதல்கட்டமாக வரும் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 91 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு வரும் 11ஆம் தேதி, 18, 23,29, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக, ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 18 மாநிலங்கள், அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2.நேரடி வரி வசூல் மூலம் திரட்டப்படும் தொகை அதன் இலக்கைக் காட்டிலும் ரூ.50,000 கோடி குறைவாக இருக்கும் என மத்திய அரசு  தெரிவித்துள்ளது.


உலகம்

1.அயல் நாடுகளில் பணிபுரிந்து தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் தங்களது தாய் நாட்டிற்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் 7,900 கோடி டாலரை (ரூ.5.53 லட்சம் கோடி) அனுப்பி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டில் வசிக்கும் சீனர்கள் தங்களது தாய் நாட்டுக்கு 6,700 கோடி டாலரை அனுப்பி இரண்டாவது இடத்திலும், மெக்ஸிகோ நாட்டவர் 3,600 கோடி டாலரை அனுப்பி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


விளையாட்டு

1.இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் ரீட் பொறுப்பேற்றார்.

2.ஆசிய குண்டு எறிதல் சாம்பியன் மன்ப்ரீத் கெளர் ஊக்க மருந்து தடை சோதனை முடிவுகளை மறைத்தார் என 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடா) உத்தரவிட்டுள்ளது.


ன்றைய தினம்

  • ஏப்ரல் 10, ஆண்டின் 100வது நாளாகும். லீப் ஆண்டில் 101வது நாளாக கணக்கிடப்படுகிறது.
  • காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரிட்டனில் வெளியிடப்பட்டன(1710)
  • அமெரிக்காவில் காப்புரிமம் பற்றிய விதிகள் எழுதப்பட்டன(1790)
  • டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது(1912)
  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இறந்த தினம்(1995)

– தென்னகம்.காம் செய்தி குழு