Current Affairs – 10 April 2018
இந்தியா
1.தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த எம்.சத்தியவதி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு யு.பி.எஸ்.சி. தலைவர் வினய் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உலகம்
1.சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டு
1.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயதே ஆன முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
1.1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
–தென்னகம்.காம் செய்தி குழு