தமிழகம்

1.கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை செப். 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


இந்தியா

1.அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப் பட்டியல்  வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

2.இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி விவேக் குமார் ஜோரி  பதவியேற்றார்.


வர்த்தகம்

1.வெளிநாடுகளிலிருந்து அகர்பத்தி மற்றும் அதேபோன்ற ஒத்த இதர பொருள்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு  கட்டுப்பாடுகளை அறிவித்தது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 43,000 கோடி டாலருக்கும் கீழ் குறைந்தது.

3.வரவுக்கும் மற்றும் செலவுக்கும் உள்ள இடைவெளியானது (நிதிப் பற்றாக்குறை) சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி ரூ.5,47,605 கோடியை எட்டியுள்ளது. நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் இது 77.8 சதவீதம்.
கடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 86.5 சதவீதமாக காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பெடரர், ஜோகோவிச், செரீனா, மடிஸன் கீய்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • சிங்கப்பூர் ஆசிரியர் தினம்
  • உஸ்பகிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)

– தென்னகம்.காம் செய்தி குழு