Current Affairs – 1 September 2018
தமிழகம்
1.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.
2.சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமைப் பதிவாளராக நீதிபதி சி.குமரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக பதவி வகித்து வந்தவர் நீதிபதி ஆர்.சக்திவேல். இவரை கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா
1.ஆசியாவின் நோபல் விருது என்று அறியப்படும் ரமோன் மகசேசே விருது, இந்தியர்களான பரத் வாத்வானி, சோனம் வாங்சுக் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
2.2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3.இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதில் ஒரே நேரத்தில் 650 பேமண்ட் வங்கிக் கிளைகளும், 3,250 சேவை மையங்களும் திறக்கப்பட இருக்கின்றன. நாட்டில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேமண்ட் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றன.
வர்த்தகம்
1.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, 15 காலாண்டுகளுக்கு பின், காணப்படும் சிறப்பான வளர்ச்சியாகும். இதற்கு முன், 2014- – 15ம் நிதியாண்டின், ஜூலை – செப்., காலாண்டில் தான், அதிகபட்சமாக, 8.4 சதவீத வளர்ச்சி
எட்டப்பட்டது.
2.பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம் துவங்கி, இன்றுடன், 62 ஆண்டுகள்
முடிவடைகிறது.
3.முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சென்ற ஜூலை மாதத்தில் 6.6 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
4.ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்ததாக வெள்ளிக்கிழமை அந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்தன.
உலகம்
1.பிகார் மாநிலம், ரக்சௌலில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நகருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
விளையாட்டு
1.ஆசியப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி அபாரமாக ஆடி 2-0 என்ற கேம் கணக்கில் நடப்பு சாம்பியன் மலேசியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் ஆடவர் அணி வெண்கலம் வென்றது.
பாய்மரப்படகு பந்தயத்தில் இந்திய அணியினர் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
2.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ஜோகோவிச், பெடரர், மரின் சிலிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- சிங்கப்பூர் ஆசிரியர் தினம்
- உஸ்பகிஸ்தான் விடுதலை தினம்(1991)
- ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)
- தென்னகம்.காம் செய்தி குழு