தமிழகம்

1.சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

2.தென்மேற்கு பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் சராசரியாக 283 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவாக இருப்பினும், அரியலூர், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில்  இயல்பைவிட குறைவான மழை பெய்துள்ளது.

3.தமிழகத்தில் 31 மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சென்னையில் இன்று நிறைவு பெறுகின்றன. மேலும், நூற்றாண்டு நிறைவு விழாவுடன், தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன் விழாவும் நடக்கவுள்ளது.


இந்தியா

1.தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல்களை அளிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

2.சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

3.இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) புதிய டைரக்டர் ஜெனரலாக (தலைவர்) மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னி காந்த் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

4.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.


வர்த்தகம்

1.வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு கொடுப்பவர்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் எம்எஸ்எம்-இ சம்பர்க் வலைதளம் செயல்பட்டு வருகிறது.


உலகம்

1.சீனா முதன் முதலாக டி18 – 1எஸ், டி18 – 2எஸ் மற்றும் டி18 – 3எஸ் என்ற பெயரிடப்பட்ட மூன்று சிறிய வகை ஹைப்பர்சோனிக் விமானங்கள் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

2.இந்தியா, தனது தயாரிப்பு பொருள்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • சீனக் குடியரசு தேசிய நாள் (1949)
  • சைப்பிரஸ் – விடுதலை நாள் (1960)
  • நைஜீரியா – விடுதலை நாள் (1960)
  • அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம்
  • தென்னகம்.காம் செய்தி குழு