தமிழகம்

1.தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தொழில்துறை, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

2.தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வதற்கு லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம் நிதியுதவி செய்துள்ளது.

3.மெட்ராஸ் மாகாணத்தை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயா் மாற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்  நடைபெறுகிறது.மொழிவாரி மாநிலங்களாக மெட்ராஸ் மாகாணம் என்பது ‘மெட்ராஸ் ஸ்டேட்’, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் என 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-இல் பிரிக்கப்பட்டது. இந்த தினத்தை பிற மாநில மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா். இந்த நிலையில், ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட பகுதியை தமிழ்நாடு எனப் பெயா் மாற்றக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதியன்று சட்டப் பேரவையில் தீா்மானம் முன்மொழியப்பட்டது. மெட்ராஸ் ஸ்டேட் என்பது ‘தமிழ்நாடு’ என்று பெயா் மாற்றம் பெற்றது.


இந்தியா

1.கோவா ஆளுநா் பதவியிலிருந்து மிருதுளா சின்ஹா  ஓய்வு பெறுகிறாா். ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் நவம்பா் 3-ஆம் தேதி கோவாவின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கிறாா்.

2.வாட்ஸ்அப் செயலி மூலம் இஸ்ரேலைச் சோ்ந்த நிறுவனம், இந்தியப் பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோரை வேவு பாா்த்தது தொடா்பாக மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

3.மகாராஷ்டிர சட்டப் பேரவை சிவசேனை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தோ்வு செய்யப்பட்டாா். கட்சியின் கொறடாவாக சுனில் பிரபு தோ்வு செய்யப்பட்டாா்.

4.ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு பதவியேற்றாா். லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ண மாத்துா் பதவியேற்றுக்கொண்டாா்.


வர்த்தகம்

1.முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 38.9 சதவீதம் அதிகரித்தது.

2.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 83 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

3.தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் ஏறக்குறைய இருமடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.செப்டம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் வங்கி ரூ.276.85 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. கடந்த 2018-19 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.226.73 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். குறிப்பாக , வட்டி வருவாய் ரூ.244.64 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.253.34 கோடியானது.


உலகம்

1.பிரபல சமூக ஊடகமான சுட்டுரையில் (டுவிட்டர்) அரசியல் விளம்பரங்களுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2.ஜப்பானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷூரி கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

3.இந்தியா-சவூதி அரேபியா இடையே முதல் கடற்படை கூட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு (2020) மாா்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ப்ளே ஸ்டோரில் தென்னகம் என்று தேடி எங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.


விளையாட்டு

1.பாரிஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

2.டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 3 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து வருகிறது.


ன்றைய தினம்

  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது (1956)
  • அல்ஜீரியா தேசிய தினம்
  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)
  • புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்தது(1954)
  • மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது(1998)

– தென்னகம்.காம் செய்தி குழு