தமிழகம்

1.தமிழகத்தில் 80 வயதைக் கடந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையை அஞ்சல் துறை மூலமாக வீட்டுக்கே சென்று நேரில் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

2.ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை 10 நாள்களுக்குள் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து, தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.இந்திய-சீனா எல்லையை பாதுகாக்கும் இந்திய- திபெத் எல்லை காவல்படை (ஐடிபிபி) தலைவராக  ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.தேஷ்வால்  நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3.இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவர் பதவியை நடிகர் அனுபம் கெர் புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

4.அதிக மதிப்பில் வங்கி மோசடி செய்த நபர்கள் பட்டியல் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்பி வைத்த பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 100-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 23 இடங்கள் முன்னேறியுள்ளது.


உலகம்

1.குவைத் பிரதமர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபாவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் அஹமது அல்தானியை தோஹாவில் சந்தித்துப் பேசினார்.

2.உலகம் முழுவதும், ஒவ்வொரு வாரத்திலும் சராசரியாக 14 லட்சம் மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகவும், இத்தகைய இடம்பெயர்வு மிகப்பெரிய பேரிடர்களை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

3.அமெரிக்காவில், பிறப்பின் மூலம் குடியுரிமை வழங்கும் சட்டத்தில் நிர்வாக ஆணையின் மூலம் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு, அவரின் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

2.சீனாவில் நடைபெறும் ஷென்ùஸன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ஒற்றையர் பிரிவில் தோல்வி கண்டார். எனினும், இரட்டையர் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது ( 1956)
  • அல்ஜீரியா தேசிய தினம்
  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)
  • புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்தது(1954)
  • மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது(1998)
  • தென்னகம்.காம் செய்தி குழு