Current Affairs – 1 May 2019
தமிழகம்
1. நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
2.தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உள்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
1.இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் பனிமனிதனின் காலடித் தடத்தை கண்டதாக, சில தடங்களின் புகைப்படத்தை ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த புகைப்படத்தை பனிமனிதன் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்களுக்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது.
2.கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது.
வர்த்தகம்
1.தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று செபி (இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் என்எஸ்இ மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற மார்ச் மாதத்தில் 4.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகம்
1.அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோஸன்ஸ்டைன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
2.அகிஹிடோவின் மகனும் பட்டத்து இளவரசருமான நருஹிடோ இன்று பதவியேற்றார்.ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதாகவும், அரசு குடும்பத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டது.உலகின் மிகப் பழைமை வாய்ந்த ஜப்பான் அரச பரம்பரையில், பதவியில் இருக்கும்போதே அரசர் ஒருவர் தனது பட்டத்தைத் துறப்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை ஆகும்.
விளையாட்டு
1.இந்திய குத்துச்சண்டை லீக் போட்டிகள் ஜூலையில் தொடங்கப்பட உள்ளன என இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎப்ஐ) தெரிவித்துள்ளது.
இன்றைய தினம்
- விளையாட்டு முதன் முறையாக அமெரிக்காவில் விளையாடப்பட்டது(1751)
- புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
- நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)
- இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
- சர்வதேச உழைப்பாளர் தினம்
– தென்னகம்.காம் செய்தி குழு