தமிழகம்

1.தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

2.ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான, புதிய பாடதிட்டம், மே 2ல் வெளியிடப்படும்  என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்


இந்தியா

1.ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை அதிகக் காலம் வகித்த பெருமையைப் பெற்று, சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் புதிய சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அவர் முதல்வர் பதவியை ஏற்று 23 ஆண்டுகள், 4 மாதங்கள், 17 நாள்கள் நிறைவடைந்தன.

2.ரஷ்யாவிடம் இருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.

 


வர்த்தகம்

1.கடந்த 2017-ஆம் ஆண்டில் 6,900 கோடி டாலரை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.50 லட்சம் கோடி) இந்தியர்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பியுள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது.இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனா 6,400 கோடி டாலர் பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், பிலிப்பின்ஸ் 3,300 கோடி டாலர் பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.


உலகம்

1.இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்து பலருக்கும் அனுமதி வழங்கியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

 


ன்றைய தினம்

1. சர்வதேச உழைப்பாளர் தினம்

2.மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)

3.புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)

 

–தென்னகம்.காம் செய்தி குழு