தமிழகம்

1.மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அதி நவீன ரயில் சென்னை-மதுரை இடையே 6 மணி 30 நிமிஷத்தில் சென்றடையும்.

2.அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் 2 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

3.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுதலை செய்யப்படுவார் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

2.வங்கிக் கணக்கு ஆரம்பிக்கவும், செல்லிடப்பேசி சிம் கார்டு வாங்கவும் ஆதாரை அடையாள ஆவணமாக விருப்பத்தின் பேரில் அளிக்க வழிவகை செய்ய அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3.மக்களவைத் தேர்தல் வரும் நிலையில், மார்ச் மாதத்திலிருந்து 3 பகுதிகளாக தேர்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்ய பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) விகிதம் 3ஆவது நிதிகாலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 5 நிதிகாலாண்டில் மிகவும் குறைவாகும்.
இதுகுறித்து அரசிடம் இருக்கும் புள்ளி விவரம் தெரிவிப்பதாவது: 2018-19ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் ஜிடிபி ரூ.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017-18ஆம் நிதியாண்டில் 3ஆவது காலாண்டில் ரூ.32.85 லட்சம் கோடியாக இருந்தது. இதை வைத்து பார்த்தால், ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதம் எனத் தெரிய வருகிறது.

2.இந்திய ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையிலும் நுழைந்துள்ளது.இதற்காக, ‘ஐ.ஆர்.சி.டி.சி., ஐ பே’ என்ற பணப் பரிவர்த்தனைக்கான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3.உலகளவில், உருக்கு துறையில், மிகச் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களில் ஒன்றாக, டாடா ஸ்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

4.கடந்த 2018-ஆம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே வியத்நாமில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு, ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே முடிவடைந்தது.


விளையாட்டு

1.டச்சு ஜூனியர் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாமியா இமத் ஃபரூக், காயத்ரி கோபிசந்த் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கினர்.

2.ஈரானில் நடைபெற்ற மாக்ரன் கோப்பை குத்துச் சண்டை போட்டியில், 49 கிலோ (லைட் ஃபிளை) எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • தென்கொரியா விடுதலை தினம்
  • திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த தினம்(1953)
  • தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)
  • ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)
  • ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)

– தென்னகம்.காம் செய்தி குழு