தமிழகம்

1.மாநில தலைமை தகவல் ஆணையரைத் தேர்வு செய்ய தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாநில தலைமை தகவல் ஆணையர்களின் பெயர்களை தெரிவுக் குழுவானது அரசுக்கு அளிக்கும்.

2.முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி.துரைராசு நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த மல்லேசப்பாவுக்குப் பதில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக (பொறுப்பு) சி.ஜோதி வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இணை இயக்குநராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பதவி வகித்து வந்தார். கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த ஆர்.சாருமதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இவர் அந்தப் பொறுப்புக்கு  நியமிக்கப்பட்டார்.

4.தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஜூன் 2-ஆவது வாரத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 13 அல்லது 14-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தைக் கூட்ட ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5.தமிழக காவல்துறையில் 5 டி.ஜி.பி.க்கள், 9 ஏ.டி.ஜி.பி.க்கள் உள்பட 19 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டது.


இந்தியா

1.2017-18-ல் நாட்டின் வேலையில்லாத பிரச்னையின் அளவு 6.1 சதவீதமாக உள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

2.கேபினட் அமைச்சர்கள்:

ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
அமித்ஷா – உள்துறை
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத் துறை
நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்
ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் பொது வினியோகத் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை, தகவல் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை
டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் துறை, எரிவாயு துறை
பியூஸ் கோயல் – ரயில்வே துறை, வர்த்தகம்
பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை
டாக்டர் ஹர்ஷ வர்தன் – குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு

முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை
முரளிதரன் – வெளியுறவுத் துறை இணையமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் – மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலத்துறை
பிரகலாத் ஜோஷி – நிலக்கரி மற்றும் சுரங்கம்
மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு

3.கடற்படையின் புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கரம்வீர் சிங் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இதையடுத்து, தலைமை தளபதியாக பொறுப்பேற்ற முதல் ஹெலிகாப்டர் போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

4.பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், வரும் ஜூன் 17-ஆம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும்.

5.புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி) ஜனவரி – மார்ச் இடையேயான காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது.

2.முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஏப்ரல் மாதத்தில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4.7 சதவீதமாக காணப்பட்டது.நடப்பாண்டு ஏப்ரலில் நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. இதைத் தவிர, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் பின்னடைவையே சந்தித்துள்ளது.
அதேசமயம், மின் உற்பத்தி துறையின் உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதம் என்ற அளவிலும், சுத்திகரிப்பு பொருள்கள் துறையின் உற்பத்தி 4.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

3.மூலதன சந்தைகளில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.81,220 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில்  சந்தித்துப் பேசினார்.

2.ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் மிக மதிப்புமிக்க கூட்டாளி நாடு இந்தியா என்று அந்த சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், டெல் பொட்ரோ, மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2.கிரண் ரிஜிஜூ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச குழந்தைகள் தினம்
  • கம்போடியா, தேசிய மரம் நடும் தினம்
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
  • ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)
  • தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)

– தென்னகம்.காம் செய்தி குழு