தமிழகம்

1.உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் 17-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2.ஆசிரியர் பணி மாறுதலுக்கான வழிகாட்டு நெறிகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.4 மக்களவை மற்றும் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. 4 மக்களவைத் தொகுதிகளில் பாஜக ஓரிடத்திலும், பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சி (என்டிபிபி) ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளே வென்றுள்ளன.

2.நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், மூன்று தொகுதிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து, மக்களவையில் பாஜகவின் பலம் 273-ஆகக் குறைந்தது.


வர்த்தகம்

1.தயாரிப்பு துறை, கட்டுமானம், சேவைகள் துறை, வேளாண் உற்பத்தி ஆகியவை சிறப்பான அளவில் இருந்ததையடுத்தது ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2.முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

3.வாட்ஸ் ஆப் நிறு­வ­னம், அடுத்த வாரம், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்க உள்­ளது.


உலகம்

1.இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்துக்கு முன்னாள் அதிபர் ராஜபட்ச தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

2.உலகளவிலான அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக இந்தியா வரும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • சர்வதேச குழந்தைகள் தினம்
  • கம்போடியா, தேசிய மரம் நடும் தினம்
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
  • ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)
  • தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)

–தென்னகம்.காம் செய்தி குழு