தமிழகம்

1.குரூப் 1 தேர்வினை எழுவதற்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.

3.தமிழகத்துக்குள் சரக்குகளை அனுப்ப இன்று முதல் மின்னணு வழித்தட ரசீது (இ-வே பில்) முறை அமலுக்கு வருகிறது.


இந்தியா

1.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவது குறித்த அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

2.பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிஷா அரசு அறிமுகம் செய்துள்ளது.


வர்த்தகம்

1.திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

2.கடந்த மே மாதத்துக்கான சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயானது, அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்க்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து, போதிய பலம் இல்லாததால் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

2.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தேசிய அளவில் நடைபெற்ற “ஸ்பெல்லிங் பீ” எனப்படும் சொல்லுக்கான எழுத்துக்களை தெரிவிக்கும் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் கார்த்திக் நெம்மேனி பெற்றி பெற்றான்.


விளையாட்டு

1.இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டததில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தியது.

2.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 4-ஆம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.


ன்றைய தினம்

  • வடகொரியா குழந்தைகள் தினம்
  • பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
  • மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
  • முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953)

–தென்னகம்.காம் செய்தி குழு