Current Affairs – 1 July 2019
தமிழகம்
1.திருப்பத்தூர் அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2.தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக ”தமிழ் மறவன்” வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன.
இந்தியா
1.இந்திய கடலோர காவல் படையின் புதிய தலைமை இயக்குநராக கே. நடராஜன் பதவியேற்றார்.
2.நாடு முழுவதும் 316 பாதுகாக்கப்பட்ட இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3.ஸ்விஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
வர்த்தகம்
1. வரும் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு, 0.1 சதவீதம் குறைத்துள்ளது.
2.ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்ய உதவும் என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றுக்கான கட்டணம் ஜூலை 1 முதல் குறைக்கப்படுகிறது.
உலகம்
1.வட கொரியாவில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்த அமெரிக்க அதிபர் என்ற புதிய வரலாற்றை டொனால்ட் டிரம்ப் நிகழ்த்தியுள்ளார்.
விளையாட்டு
1.கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு பெரு தகுதி பெற்றது.
2.பிரான்ஸில் நடைபெற்று வரும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நெதர்லாந்து, ஸ்வீடன் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இன்றைய தினம்
- இந்திய மருத்துவர்கள் தினம்
- சோமாலியா விடுதலை தினம்(1960)
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
- இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி முழு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது(1947)
- ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
– தென்னகம்.காம் செய்தி குழு