தமிழகம்

1.திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2.ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது, விற்பனை, உற்பத்தி செய்வதற்கான தமிழக அரசின் தடை அமலுக்கு வருகிறது.

3.மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.மத்திய தகவல் ஆணையத்தின்(சிஐசி) தலைமை ஆணையராக, சுதிர் பார்கவாவை மத்திய அரசு நியமித்துள்ளது.

2.ரயில்வே வாரியத் தலைவராக இருந்த அஸ்வானி லோஹானி திங்கள்கிழமையுடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து, அந்தப் பதவியில் தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் வி.கே. யாதவை மத்திய அரசு நியமித்துள்ளது.

3.நாகாலாந்தில், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, வரும் ஜூன் மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

4.அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.வங்கித் துறை வாராக் கடன் வசூல் நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருவதால் வாராக் கடன் அளவு குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

2.பாசுமதி அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரூ.16,963 கோடி மதிப்புக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.15,208 கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் வருவாய் 11.54 சதவீதம் உயர்ந்துள்ளது.


உலகம்

1.அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சராக, அந்தத் துறையின் தற்போதைய இணையமைச்சர் பேட்ரிக் ஷானஹன்  பதவியேற்கிறார்.

2.வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் பிரதமராகிறார்.


விளையாட்டு

1.இந்திய அணியின் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச குடும்ப தினம்
  • உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது(1995)
  • யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது(1999)
  • ஐரோப்பிய அமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  • சீன குடியரசு அமைக்கப்பட்டது(1912)
  • ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது(கிமு 45)

– தென்னகம்.காம் செய்தி குழு