தமிழகம்

1.ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2.தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப் பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.91 கோடியாக அதிகரித்துள்ளது.


இந்தியா

1.இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ‘டிராய்’ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2.மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கவனித்து வந்தது.


வர்த்தகம்

1.இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடி எட்டியது இது மூன்றாவது முறையாகும்.

2.மத்­திய அரசு, 2017 – -18ம் நிதி­யாண்­டின், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியை, 6.7 சத­வீ­தத்­தில் இருந்து, 7.2 சத­வீ­த­மாக உயர்த்தி, மறு­ம­திப்­பீடு செய்­துள்­ளது.


உலகம்

1.அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திட்டால்தான் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை அனுமதிக்க ஒப்புக்கொள்ள முடியும் என்று சீனா மீண்டும்  கூறியுள்ளது.


விளையாட்டு

1.இந்தியா-இத்தாலி அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி ஆட்டம் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.


ன்றைய தினம்

  • டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது(1864)
  • ஆசியாவின் முதலாவது தபால் மெயில் கோச், கண்டியில் ஆரம்பமாகியது(1832)
  • உலகின் மிகப் பெரிய ரயில்நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)
  • தமிழ் நாடகத்துறை முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
  • விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த தினம்(2003)

– தென்னகம்.காம் செய்தி குழு