தமிழகம்

1.முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

2.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

3.கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்தியா

1.இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத்தலைவராக சிவசேனை கட்சியை சேர்ந்த விஜய் ஆதி போட்டியின்றி வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3.தில்லியில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் மசூத் ஹுசேன் தலைமையில் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது.


வர்த்தகம்

1.முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற அக்டோபர் மாதத்தில் 4.8 சதவீதமாக குறைந்துள்ளது.இவற்றின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்தாண்டு அக்டோபரில் 5 சதவீதமாக காணப்பட்டது.

2.நடப்பு நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், வளர்ச்சி வேகத்தில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

3.ஐ.டி.எப்.சி., பேங்க், அதன் பெயரை, ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் லிமிடெட் என மாற்ற உள்ளது.இதற்காக, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலை கோரியுள்ளது.


உலகம்

1.வட கொரியாவுடன் மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, தென் கொரிய பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ரயில் மூலம் வட கொரியாவுக்கு வெள்ளிக்கிழமை பயணம் தொடங்கினர்.

2.16 முதல் 60 வயது கொண்ட ரஷ்ய ஆண்கள் உக்ரைனுக்குள் வருவதற்கு அந்த நாடு வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

3.அமெரிக்காவில் கடவுச்சீட்டு வழங்கும் முறையை எளிமைப்படுத்துவதற்காக, முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் கடவுச்சீட்டு சேவை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.


விளையாட்டு

1.தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் மானு பாக்கர், ஹீனா சித்து ஆகியோரை பின்னுக்கு தள்ளி 13 வயது இஷா சிங் மூன்று தங்கம் வென்றுள்ளார்.

2.இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், பூஜா தண்டாவுக்கு ஏ கிரேடு ஒப்பந்தங்களை இந்திய மல்யுத்த சம்மேளனம் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பி கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

3.ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

4.உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பி பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வலுகுன்றிய அயர்லாந்தை போராடி வென்றது.


ன்றைய தினம்

  • உலக எய்ட்ஸ் தினம்
  • மியான்மர் தேசிய தினம்
  • பனாமா ஆசிரியர் தினம்
  • இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
  • நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
  • தென்னகம்.காம் செய்தி குழு