தமிழகம்

1.ஒக்கி புயல் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மீட்புப்பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளது.

2.ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் திருத்தப்பட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 பெருநகரங்களுக்கு இடையேயான அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் முதல் முறையாக, சீக்கிய மதத்தை சேர்ந்த பிரீத் டிட்பால், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்­டம்­பர்
வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், 6.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.

2.சென்­னை­யில் இன்று, எப்.ஐ.சி.சி.ஐ., எனப்­படும், இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை
கூட்­ட­மைப்பு சார்­பில், வலை­தள வர்த்­தக உச்சி மாநாடு நடை­பெற உள்­ளது.


விளையாட்டு

1.உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2.முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிவேகமான 300 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

 


இன்றைய தினம்

1. உலக எய்ட்ஸ் நாள்

2.போர்ச்சுகல் – விடுதலை நாள்

–தென்னகம்.காம் செய்தி குழு