தமிழகம்

1.பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராகவும், சமூகநலத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் பொதுப்பணித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நுகர்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் மதுமதி சமூகநலத் துறை செயலாளராகவும், நுகர்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக கண்ணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமுவை குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநராகவும், சமூகநலத் துறை ஆணையராக ஆபிரகாமையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2.சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் 24.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

3.கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


இந்தியா

1.மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க வழிவகுக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34-ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

3.முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

4.சாலைப் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.

5.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சிறப்பு செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி இ.எல்.எஸ்.என். பால பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.எம்.டி.என்.எல் – பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது, தொலை தொடர்பு துறை.


உலகம்

1.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவுக்கு திறன் மேம்பாடு, ஜவுளித் தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, சுமார் ரூ.3 கோடி (5 லட்சம் டாலர்) நிதியுதவியை இந்தியா அறிவித்துள்ளது.

2.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடயிலான வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மீண்டும் மேற்கொண்டன.

3.சர்வதேச கல்வி ஆலோசனை அமைப்பான க்யூஎஸ் குவாக்வரேலி சைமண்ட்ஸ், மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்கு ஏற்ற உலகின் மிகச் சிறந்த நகரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. மாணவர்கள் வசிப்பதற்கு ஏற்ற உலகின் தலைசிறந்த நகரமாக பிரிட்டன் தலைநகர் லண்டன் 2-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி/அஷ்வினி பொன்னப்பா இணை தங்களின் முதல் சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மலேசியாவின் சான் பெங் சூன்/கோ லியு யிங் ஜோடியை வீழ்த்தியது.

2.சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கெளரவ் சோலங்கி, பிங்கி ஜங்ரா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தனர்.


ன்றைய தினம்

  • உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்
  • உலக சாரணர் தினம்
  • லெபனான் ராணுவ தினம்
  • சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
  • ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1774)

– தென்னகம்.காம் செய்தி குழு