தமிழகம்

1.உலக தாய்ப்பால் வார விழா  தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2.கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவராகப் பணிபுரிந்து வந்த சரத்குமார் ஆச்சார்யா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

2.அயர்லாந்துக்கான இந்தியத் தூதராக உள்ள விஜய் தாக்குர் சிங் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலராக(கிழக்கு)நியமிக்கப்பட்டுள்ளார்.

3.நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு (எஃப்ஆர்டிஐ) மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் தலைவருக்கு மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.


வர்த்தகம்

1.முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 6.7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 7 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

2.2017-2018 நிதியாண்டின் முடிவில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.61 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.


உலகம்

1.ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.இத்தாலியுடன் நடைபெற்ற கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

2.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே சமீர் வர்மா, பிரணாய் உள்பட இரட்டையர் பிரிவு வீரர்கள் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்
  • உலக சாரணர் தினம்
  • லெபனான் ராணுவ தினம்
  • சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
  • ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1774)

–தென்னகம்.காம் செய்தி குழு